• Nov 19 2024

பிரகாஷ் ராஜ் இந்தியராக இருப்பதற்குத் தகுதியற்றவர்... நாடார் சங்கத் தலைவர் பரபரப்புப் புகார்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரகாஷ்ராஜ். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து அசத்தி இருக்கின்றார். பிரகாஷ்ராஜ் சமீபகாலமாக அரசியல் பற்றி பல விடயங்களை மிகவும் துணிச்சலாக பேசி வருகிறார். 


அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திராயன் 3 வருகிற 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதனை விமர்சிக்கும் விதமாக பிரகாஷ் ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் "விக்ரம் லேண்டர் மூலம் எடுக்கப்பட்டு நிலவில் இருந்து பூமிக்கு வந்த முதல் படம்" என தேநீர் ஆற்றும் நபர் ஒருவரின் படத்தை பகிர்ந்திருக்கிறார். 

இந்த விடயமானது சாதாரண மக்கள் தொட்டு அரசியல் பிரபலங்கள் வரை சர்ச்சையைக் கிளப்பி இருந்தது. இதற்கு பிரகாஷ் ராஜ் விளக்கமளித்தும் அதனை யாரும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. 


இந்நிலையில் தமிழ்நாடு நாடார் சங்க நிர்வாகிகள் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரகாஷ் ராஜ் புகார் ஒன்றினைப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக நாடார் சங்க தலைவர் முத்துரமேசு "சந்திரயான் தொடர்பாகவும் இந்திய விஞ்ஞானிகள் குறித்தும் கார்ட்டூன் வெளியிட்ட  திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜின் இந்திய அடையாளங்கள் பறிக்க படவேண்டும்" எனக் கூறிக் கருத்து வெளியிட்டிருக்கின்றார். 

அதுமட்டுமல்லாது " இந்திய அரசால் வழங்கபட்ட அனைத்து அடையாளங்களையும் இந்திய அரசு பறிக்க  வேண்டும் என்வும் பிரகாஷ் ராஜ்  இந்தியர் என்பதற்கு தகுதியற்றவர்" எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement