பிரதமர் மோடியை நடிகர் பிரகாஷ்ராஜ் பகிரங்கமாக 420 என திட்டி உள்ளதை
அடுத்து பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் அவருக்கு ஆப்பு இருக்கிறது என கூறப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே பாஜக
மீது நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம் வைத்து வருகிறார் என்பதும் குறிப்பாக பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பது தெரிந்தது.
இந்த நிலையில். பாராளுமன்ற தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்
என சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பிரதமர்
மோடி பேசியது குறித்து கூறிய பிரகாஷ்ராஜ் ’400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுபவர்கள்
420 மோசடி பேர்வழிகள் என்றும் ஒரு ஜனநாயக நாட்டில்
எந்த கட்சியும் 100 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்பில்லை
என்று கூறினார். மேலும் 400 இடங்களை முறைகேடு செய்து, மோசடி செய்து தான் வெற்றி பெற
முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு சொந்த
நாட்டின் பிரதமரையே 420 என அநாகரிமாக பிரகாஷ்ராஜ்
விமர்சித்துள்ளார் என்று அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் பிரகாஷ்ராஜின் நெருங்கிய நண்பர் கௌரி லங்கேஷ் என்ற
எழுத்தாளர் கடந்த 2017 ஆம் ஆண்டு படுகொலை
செய்யப்பட்டதிலிருந்து அவர் மத்திய அரசை
கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த
பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக அவர் பெங்களூரு மத்திய
தொகுதியில் போட்டியிட்டார் என்றும் ஆனால் அவர் வெறும் 2 சதவிகித
வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த
ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதே தொகுதியில் அவர்
போட்டியிடுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Listen News!