• Nov 10 2024

தமிழ் சினிமா உலகில் மறக்க முடியாத பிரதாப் போத்தன்

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இளையராஜாவின் நூறாவது படமான மூடுபனியின் கதாநாயகன் பிரதாப் போத்தன் மறைந்தார் . பண்பட்ட நடிப்பால் தமிழ் சினிமா உலகில் 1980 களில் தனக்கென ஒரு இடத்தை வைத்திருந்தவர் பிரதாப். கேரளத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரதாப் தனது 70 வது வயதில் இன்று காலமானார். நடிகை ராதிகாவைத் திருமணம் செய்தார். ஆனாலும் மணவாழ்க்கை சில வருடங்களில் முடிவுக்கு வந்தது.

அழியாத கோலங்கள் படத்தில் 1979 இல் அறிமுகமானார்.அவரது பண்பட்ட நடிப்பு அப்போது பேசப்பட்டது. ஆனாலும் அவர் கதாநாயகனாக நடித்து 1980 இல் வெளிவந்த 'மூடுபனி' படம் தான் அவருக்குத் தமிழ் சினிமா உலகில் பெரிய முகவரியைக் கொடுத்தது. 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்தில் மோகன் நாயகன். ஆனால் அந்தப்படத்தில் துணை நடிகராக வந்தாலும் பிரதாப் தனது நடிப்பால் ஒளிர்ந்தார்.

'இளமைக்காலம்','வறுமையின் நிறம் சிகப்பு', 'கரையெல்லாம் செண்பகப்பூ', 'குடும்பம் ஒரு கதம்பம்', 'பன்னீர் புஸ்பங்கள்', 'தில்லுமுல்லு' என அவரது தமிழ் திரைப்படங்களின் நீளம் அதிகமானது. கமலஹாசன், ஸ்ரீதேவி, ஸ்ரீப்பிரியா, மனோரமா எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்த 'வாழ்வே மாயம்' படத்தில் பிரதாப் போத்தன் வலுவான ஒரு பாத்திரம் ஏற்று படத்தின் வெற்றிக்குத் துணை நின்றார்.

தமிழ்,மலையாளம்,தெலுங்கு ஆகிய மும்மொழிகளிலும் பிரதாப் போத்தன் படுபிஸியான ஒரு நடிகராக இருந்தார். அத்தோடு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை மலையாளத்தில் இருமுறை பெற்றார். 2020 இல் வெளியாகிய பொன்மகள் வந்தாள் எனும் படமே தமிழில் அவர் நடித்த இறுதிப் படமாகும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement