• Sep 20 2024

நெற்றியில் முத்தம் கொடுத்து கணவனை வழி அனுப்பி வைத்த பிரதாப் போத்தனின் மனைவி அமலா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களை நடித்து வந்தவர் தான் நடிகர் பிரதாப் போத்தன். இவர் பல திரைப்படங்களையும் இயக்கி இருக்கின்றார். இந்த நிலையில் இவர் கடந்த கடந்த வெள்ளிக்கிழமை இறப்புக்குள்ளானார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அப்பார்ட்மெண்டில் தனியாக வசித்து வந்த பிரதாப் போத்தன், வெள்ளிக்கிழமை காலை படுக்கையில் சடலமாக மீட்கப்பட்டார்.தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை அவரது இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கம் வேளங்காடு மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இறுதிச்சடங்கின் போது பிரதாப் போத்தனின் முன்னாள் மனைவியான அமலா சத்யநாத்தும் கலந்து கொண்டுள்ளார். நடிகை ராதிகாவை விவாகரத்து செய்த பிறகு நடிகர் பிரதாப் போத்தன், அமலா சத்யநாத் என்பவரை திருமணம் செய்தார்.

இவர்களுக்கு கெயா போத்தன் என்ற மகள் உள்ளார். பெங்களூரில் செட்டிலானா கெயா போத்தன் இசைத்துறையில் உள்ளார். இந்நிலையில் பிரதாப் போத்தன் இறந்த தகவலை கேட்டு அவரது முன்னாள் மனைவி அமலாவும் மகள் கெயாவும் கீழ்ப்பாக்கம் வீட்டிற்கு வந்தனர்.

அப்போது பிரதாப் போத்தனின் உடலை பார்த்து கதறியழுத அவர்கள், அவரது நெற்றியில் முத்தம் கொடுத்தது அங்கு கூடியிருந்தவர்களை கலங்க செய்தது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement