• Sep 20 2024

துணிவை விட ரிலீசுக்கு முன்பே வெறித்தமான வசூல் வேட்டையில் வாரிசு!- இத்தனை கோடி அள்ளுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில் ஜனவரி மாதம் 11-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.9 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரின் படங்களும் மோதிக் கொள்வதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இவ்விரு படங்களின் ரிலீஸ் வேலைகள் ஒருபக்கம் ஆரவாரமாக  நடைபெற்று வரும் இந்த வேளையில், ரிலீசுக்கு முன் எந்த படம் அதிக கலெக்‌ஷன் அள்ளி உள்ளது என்பதை நாம் இத்தொகுப்பில் பார்க்கலாம்.

விஜய்யின் வாரிசு படத்தை பொறுத்தவரை இப்​படத்தின் தமிழ்நாடு உரிமை மட்டும் சுமார் 70 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. 


தளபதி விஜய்க்கு தமிழ்நாடு தவிர்ந்த கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலும் அதிகளவிலான ரசிகர் கூட்டம் இருப்பதால், அங்கும் வாரிசு படம் அதிக விலைக்கு விற்பனை ஆகி உள்ளது. அதன்படி இப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமை ரூ.6.5 கோடிக்கும், கர்நாடகா உரிமை ரூ.7.5 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளது. 

வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜுவே விநியோகம் செய்யும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இப்படத்தின் உரிமை ரூ.18 கோடிக்கு விற்பனையாகி உள்ளன. அதேபோன்று வாரிசு படத்தின் வெளிநாட்டு உரிமைகளும் ரூ. 32 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது. 

இது தவிர வாரிசு படத்தின் இந்தி உரிமை ரூ.34 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது, மேலும் இப்படத்தின் ஆடியோ உரிமை ரூ.10 கோடிக்கு டி-சீரிஸ் நிறுவனம் வாங்கி உள்ளது.

டிஜிட்டல் உரிமையை பொறுத்தவரை வாரிசு படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.75 கோடிக்கு வாங்கி உள்ளது. அதேபோன்று  இதன் சாட்டிலைட் உரிமையை சன் டிவி ரூ.57 கோடிக்கு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் ரிலீசுக்கு முன்பே இப்படம் ரூ.300 கோடிக்கு மேல் கலெக்‌ஷனை குவித்துள்ளது.


அதே போல அஜித்தின் துணிவு படத்தை பொறுத்தவரையில் , இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ரூ.60 கோடிக்கு வாங்கி உள்ளது. , கேரளா உரிமை ரூ.2.5 கோடிக்கும், கர்நாடக உரிமை ரூ.3.6 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது .

மேலும்,அதேபோன்று இந்தி உரிமை ரூ.25 கோடிக்கும், இசை உரிமை 2 கோடிக்கும் விற்கப்பட்டு உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா உரிமைகள் ரூ.3.5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. 

டிஜிட்டல் உரிமையை பொறுத்தவரை, இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.65 கோடிக்கு வாங்கி உள்ளது. அதேபோல் சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி ரூ.20 கோடிக்கு வாங்கியுள்ளது. இதன் வெளிநாட்டு உரிமையை லைகா நிறுவனம் ரூ.18 கோடிக்கு வாங்கி இருக்கிறது. இப்படம் ரிலீசுக்கு முன் ரூ.200 கோடி வரை கலெக்‌ஷன் அள்ளிக் குவித்துள்ளது என்றும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement