• Sep 21 2024

ரோஜா சீரியல் நடிகையின் வளைகாப்பு புகைப்படங்கள்-வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் ரோஜா.இவ் சீரியலில் ஹீரோவாக அர்ஜுன் என்ற ரோலில் நடிகர் சிபு சூர்யன் நடித்து வருகிறார்.ஹீரோயினாக ரோஜா என்ற ரோலில் நடிகை பிரியங்கா நல்கார் நடிக்கிறார். வடிவுக்கரசி, சிவா, ராஜேஷ் போன்ற பலர் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலின் மிகப் பெரிய வெற்றிக்கு கதாபாத்திரங்களின் நடிப்பு முக்கிய காரணமாக உள்ளது. ஹீரோ ஹீரோயினுக்கு அடுத்தப்படியாக வில்லி கதாபாத்திரத்துக்கு இந்த சீரியலில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அந்த வகையில் இதில் வில்லியாக நடித்து வருபவர் தான் விஜே அக்‌ஷயா.



இவர் இந்த சீரியலுக்கு முதல் சன் டிவி-யில் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் வணக்கம் தமிழா ஷோவைத் தொகுத்து வழங்கி இருக்கின்றார்.



இந்நிலையில் ரோஜா சீரியலுக்கு வரும் முன்பே இவருக்கு திருமணம் நடைபெற்று இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன் திருமண நாளில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து இருந்தார். இந்த நிலையில் இவருக்கு படு சிம்பிளாக வளைகாப்பு நடைபெற்று இருக்கிறது.





Advertisement

Advertisement