• Sep 20 2024

கமலுக்கு கோரிக்கை வைத்த பிரேமம் பட இயக்குநர்; நடந்தால் நல்லா இருக்குமே..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கமல் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து தயாரித்த இப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் இதையடுத்து கமல்ஹாசன் மீண்டும் படங்களில் சுறுசுறுப்பாக நடிக்க தயாராகி வருகின்றார்.

அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் துவங்கப்பட்ட இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளார்.அத்தோடு மலையாள இயக்குநரான மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்திலும் அது முடிந்தவுடன் மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார் கமல்.

இந்நிலையில் திரையுலகில் பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் கமலின் தீவிர ரசிகராக இருகின்றனர்.அத்தோடு பலர் கமலின் நடிப்பை பார்த்து தான் சினிமாவிற்கே வருகின்றனர். அந்த வகையில் ப்ரேமம் படத்தை இயக்கிய பிரபல இயக்குநரான அல்போன்ஸ் புத்ரன் தீவிர கமல் ரசிகர் ஆவார்.

எனவே அவர் தற்போது கமலுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதாவது கமல் ஒரு நடிப்பு பள்ளியை துவங்க வேண்டும் என்றும், அதில் பிரபல இயக்குநர்கள் வந்து பாடம் நடத்த வேண்டும் என்றும் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

அத்தோடு அந்த பள்ளியில் கமல் சில நிமிடங்கள் பாடம் நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன். தற்போது இவர் பதிவிட்ட இந்த ட்வீட் இணையத்தில் செம வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement