கடந்த மார்ச் 12 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95ஆவது ஆஸ்கர் விருது விழா பிரமாண்டமாக நடைபெற்றது. திரையுலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் இந்த ஆஸ்கர் விழாவில் சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருது இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட 'The Elephant Whisperers' என்ற படத்திற்கு கிடைத்தது.
இதற்கான ஆஸ்கார் விருதை இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் பெற்றுக் கொண்டார். இதேபோல் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' என்ற பாடல் ஆனது சிறந்த பாடல் பிரிவில் விருது வென்று சாதனை படைத்தது. இவ்வாறு ஆஸ்கர் விருது இந்திய படங்களுக்கு கிடைத்ததை இந்தியா முழுவதும் ஏராளமானோர் கொண்டாடினர்.
இந்நிலையில் நேற்றையதினம் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி குடியரசு தலைவரை சந்தித்தனர். அந்தவகையில் ஆதரவற்ற யானைக் குட்டிகளைப் பராமரிப்பதில் தமது வாழ்நாளை அர்ப்பணித்த பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
President Droupadi Murmu felicitated Bomman and Bellie, the protagonists of the Oscar winning documentary 'The Elephant Whisperers' at Rashtrapati Bhavan. The President praised the couple belonging to Kattunayakan tribe for devoting their life in taking care of orphaned baby… pic.twitter.com/Kd4V7BYsL1
Listen News!