• Nov 14 2024

கைதி நான் நடித்திருக்க வேண்டிய படம்…உண்மையை உடைத்த விக்ரம் பட நடிகர்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மாநகரம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திருப்பினார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். எந்த ஒரு முன்னணி நடிகர்களும் இன்றி கதையை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் மாநகரம். எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக திகழ்ந்தது.

எனினும் அதைத்தொடர்ந்து லோகேஷ் கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி இப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

விக்ரம் படத்தின் பாடல்கள், ட்ரைலர் என அனைத்தும் ரசிகர்களின் வரவேற்பை பெற இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. எனினும் இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தில் முதலில் நான் தான் நடக்க இருந்ததாக நடிகர் விஜய் சேதுபதி ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருக்கின்றார்.

2019 ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பாடல்கள் மற்றும் நாயகி இல்லாமல் முழுக்க முழுக்க இரவிலேயே படமாக்கப்பட்ட கைதி ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை தந்தது.

மேலும் நடிகர் கார்த்தியின் திரைவாழ்க்கையில் மிகமுக்கியமான படமாக அமைந்த கைதி படத்தில் முதலில் விஜய் சேதுபதிதான் நடிக்க இருந்தாராம். ஆனால் ஒரு சில காராணங்களால் அப்படத்தில் அவர் நடிக்க முடியாமல் போனதாம். இருப்பினும் அதை நினைத்து அவர் வருந்தவில்லை என்றும், கார்த்தி அப்படத்தில் அபாரமாக நடித்திருந்ததாகவும் தெரிவித்தார் விஜய் சேதுபதி.

இந்நிலையில் கைதி படத்தை தொடர்ந்து லோகேஷ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து பாராட்டை பெற்றார் விஜய் சேதுபதி. எனினும் தற்போது உலகநாயகன் நடிப்பில் வெளியாகவிருக்கும் விக்ரம் படத்திலும் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/dcGHuP0Ro1U

சமூக ஊடகங்களில்:

  1. Facebook : சினிசமூகம் முகநூல்
  2. Twitter: சினிசமூகம் ட்விட்டர்
  3. Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement