• Sep 20 2024

தளபதி 67 படத்தில் இணைந்த கைதி பட பிரபலங்கள்- ஷுட்டிங் எப்போது ஆரம்பம் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநரின் மகன் என்ற அடையாளத்தோடு அறிமுகமாகினாலும் தனது அயராத முயற்சியினால் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கும் ஒரு நடிகர் தான் தளபதி விஜய். இவர் நேற்றைய தினம் தனது 48 வது பிறந்த நாளைக் கொண்டாடியிருந்தார். இவருக்கு ரசிகர்கள் திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

மேலும் இவரின் பிறந்தநாளில் இவர் நடித்த வரும் 66 வது படமான வாரிசு திரைப்படத்திலிருந்து மூன்று விதமான போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்தி இருந்தனர்.

மேலும் தளபதி 66 படத்தை போல் தளபதி 67 படத்தின் முக்கிய அறிவிப்பு என தகவல் வெளியானதால் ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். ஆனால் இது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும் தற்பொழுது வெளியாகிய தகவலின் படி தளபதி 67 வழக்கமான லோகேஷ் கனகராஜ் படமாக இருக்காதாம்.

லோகேஷ் யுனிவர்ஸ் படமாகவும் இல்லாமல் தனித்துவமான படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அக்டோபர் மாதம் 2 ம் தேதி படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.தளபதி 67 படத்தில் நரேன், அர்ஜுன் தாஸ் ஆகியோர் இணைந்திருப்பதாக கூறப்படுவதால் ஒருவேளை மாஸ்டர் படத்தின் தொடர்ச்சியா அல்லது அடுத்து இயக்க போகும் கைதி 2 படத்திற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • பிற செய்திகள்

நிறைமாத கர்ப்பமாக இருக்கும் நமிதாவின் வேற லெவல் போட்டோ ஷுட் வீடியோ-லைக்குகளை குவித்து வரும் ரசிகர்கள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement