• Nov 10 2024

பொம்மை படத்தை புரோமோட் செய்த பிரியா பவானி ஷங்கர்! - 'ஆதிபுருஷ்' படத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் !

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் 'அபியும் நானும்', 'மொழி', போன்ற படங்களை இயக்கி சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்தவர் இயக்குநர் ராதா மோகன். இவர் உப்புக்கருவாடு படத்தை தொடர்ந்து தற்போது இயக்கியுள்ள 'பொம்மை' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

எஸ் ஜே சூர்யா - பிரியா பவானி சங்கர் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ள,  பொம்மை திரைப்படத்தை,  பிரியா பவானி சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ப்ரோமோட் செய்ய, இதற்கு நெட்டிசன்கள் சிலர் பொம்மை படம் வெளியாகும் அன்று திரைக்கு வரும் பிரபாஸின் பிக் பட்ஜெட் படமான ஆதிபுருஷ் படத்தை கலாய்த்து வருகின்றனர்.

ஒருசில படங்களில், கதாநாயகியாக துண்டு சீனில் 10 நிமிடம் மட்டுமே எட்டிப்பார்த்த, பிரியா பவானி ஷங்கருக்கு பொம்மை திரைப்படம் அவருடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமான படமாக இருக்கும் என்பது ட்ரைலரை பார்த்ததுமே தெரிந்தது. 

இந்த படத்தில் ஒரு பொம்மை மீது வெறி கொண்ட காதலுடன் இருக்கும் எஸ் ஜே சூர்யாவை, காதலிக்கும் பொம்மையாக நடித்திருக்கிறார் ப்ரியா பவானி சங்கர். குறிப்பாக அந்த பொம்மை கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பிரியா பவானி சங்கர் பொருந்துகிறார். இதுவரை ஆபாசம் இல்லாத காட்சிகளில் நடித்த பிரியா பவானி சங்கர், இந்த படத்தில் ஒரு படி மேலே போய் முத்த காட்சிக்கு முன்னேறி உள்ளார். இப்படம்  ஜூன் 16ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில். இந்த படம் குறித்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு புரமோட் செய்திருந்தார்.

இதைப் பார்த்து நெட்டிசன்கள் சிலர், தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஒருவர் 100 சதவீதம் இந்த திரைப்படம் தரமானதாக இருக்கும் என நம்புகிறேன். பிக் பட்ஜெட் கார்ட்டூன் படங்களை காட்டிலும் என கூறி ஆதிபுருஷ் படத்தை கலாய்த்துள்ளார். 

மேலும் இந்த படம் வெளியாவதற்கு முன்பே, ஒரு சில சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது. இயக்குநர் ஹரி சங்கர் என்பவர் அவர் எழுதிய 'உடல்' என்ற கதையின் காப்பியாக 'பொம்மை 'இருக்கலாம் என தெரிவித்த நிலையில், 1987 ஆம் ஆண்டு வெளியான 'மனிகுயின்' என்ற பாலிவுட் படத்தின் காப்பியாகவும் இப்படம் இருக்கலாம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 




Advertisement

Advertisement