தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் பிரபல சேனல்களில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளராக அறிமுகமாகி அதன் பின்பு சின்னத்திரை தொடர்களில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். சின்னத்திரையில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தமையால் இவருக்கு வெள்ளித்திரையிலும் பட வாய்ப்புக்கள் கிடைக்கத் தொடங்கின.
அந்தவகையில் 'மேயாதமான்' என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவ்வாறாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து கைவசம் பல படங்களுடன் வளரும் இளம் நடிகைகள் பட்டியலில் இன்றுவரை இருந்து வருகின்றார்.
படங்களில் மட்டுமன்றி சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ப்ரியா அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் கலகலப்பாக பதிலளிப்பார். அதுமட்டுமல்லாது கடந்த 10 வருடங்களாகவே ராஜவேலு என்பவரை காதலித்து வருகிறார். பல முறை தன்னுடைய காதலனுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வயித்தெரிச்சலுக்கு ஆளாக்குவார்.
இந்த நிலையில் தற்போது குட்டி ஷார்ட்ஸ் மற்றும் ரீசேர்ட் அணிந்து அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் தமது லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருவதோடு, அப்புகைப்படங்களை அதிகளவில் ஷேர் செய்து வைரலாக்கியும் வருகின்றனர்.
Listen News!