• Sep 20 2024

வயதான தோற்றத்திற்கு மாறிய ப்ரியங்கா,அமீர் மற்றும் பாவனி- இணையத்தில் வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த பல வருடங்களாக விஜய்டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தொகுப்பாளினி ப்ரியங்கா. இவர் விஜய்டிவியில் ஸ்ராட் மியூசிக் சூப்பர் சிங்கர் போன்ற பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இது தவிர பிக்பாஸ் சீசன் 5 இலும் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.அதே நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டவர்கள், அமீர் மற்றும் பாவனி. இந்த மூவரும் தற்போது நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக அமீர் மற்றும் பாவனி இருக்க, பிரியங்கா அந்த நிகழ்ச்சியை ராஜுவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், தொகுப்பாளினி பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமீர், பாவனி மற்றும் சில பிக் பாஸ் நண்பர்களுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், ஒரு விதமான பில்டர் போட்டுள்ளதால் இந்த வீடியோவில் தெரியும் அனைவரும் வயதான தோற்றத்தில் தெரிகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement