பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, இதுவரை 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து ஹாலிவுட்டிலும் கால் பதித்து பல படங்களிலும் நடித்து வருகிறார்.
இதுதவிர, சுற்றுச்சூழல், ஆரோக்கியம், கல்வி, பெண்கள் உரிமை உள்ளிட்ட விஷயங்களுக்காக குரல் கொடுத்துவரும் இவர், 2006ம் ஆண்டிலிருந்து ஐ.நா.வின் யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராகச் செயல்பட்டு வருகிறார். இவர் சமீபத்தில் சினிமா துறையில் ஆண்களுக்கு அதிக ஊதியமும் பெண்களுக்குக் குறைவான ஊதியமும் தரப்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் இந்த ஊதிய பாகுபாடு பற்றி பேசிய பிரியங்கா சோப்ரா,
நிறைய ஆண்கள் பெண்களின் வெற்றிகளைப் பார்த்து பயப்படுகிறார்கள் எனக் கூறியிருக்கிறார். இதுபற்றி பேசியுள்ள அவர்,நான் என்னுடைய வாழ்க்கையில் பல ஆண்களுடைய வளர்ச்சியை பார்த்திருக்கிறேன். ஆனால், அவர்களுடைய வளர்ச்சியை பார்த்து நான் பயந்தது இல்லை. என்னுடைய வெற்றிகளையும், சாதனைகளையும் கண்டு பல ஆண்கள் பயந்திருக்கிறார்கள். அதுபோன்று பயப்படும் ஆண்கள் சுதந்திரத்தை குடும்பத்தின் தலைவராக இருப்பதை பெருமையாகக் கருதுவார்கள்.
ஒரு குடும்பத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வது, சாதனைகள் புரிவதெல்லாம் அவர்களுக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்துகிறது. என்னுடைய தந்தை ராணுவத்தில்தான் இருந்தார். என்னுடைய அம்மாவும் வேலை செய்து அப்பாவை விடவும் அதிகம் சம்பாதித்தார். அவர்களுக்குள் எந்த கருத்துவேறு பாடும் இல்லை.அப்படி தான் அனைவரும் இருக்கவேண்டும்" என கூறியுள்ளார்.
Listen News!