பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ப்ரியங்கா சோப்ரா. இவர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து பாலிவூட்டில் வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கே நடித்து வருகின்றார்.
மேலும் இவர் தன்னை விட 10 வயது குறைந்த நிக் ஜோனாஸ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்குப் பிறகு கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.அத்தோடு ப்ரியங்கா - நிக் ஜோனஸ் தம்பதியினர் வாடகை தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் ப்ரியங்கா அண்மையில் சுற்றுப் பயணம் மேற் கொண்டிருந்தார். பயணத்திற்கு பிறகு, இப்போது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது இல்லத்திற்குத் திரும்பியுள்ளார்,
தற்பொழுது இன்ஸ்டாகிராமில், நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு படத்தை பதிவிட்டார். அதில் அவர் மகளை அரவணைத்துக் கொண்டு இருந்தார். நிக் தரையில் படுத்திருந்து அம்மாவையும் பிள்ளையையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார். இந்தப் புகைப்படம் வைரலாகி வருவதையும் காணலாம்
Listen News!