• Sep 20 2024

வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் குழந்தையுடன் இருக்கும் பிரியங்கா சோப்ரா - ஒரு முறையாவது முகத்தை காட்டலாம் தானே?

stella / 2 years ago

Advertisement

Listen News!

2002 ஆம் ஆண்டு வெளியான தமிழன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா. இதனைத் தொடர்ந்து தமிழில் படவாய்ப்புக்கள் கிடைக்காததால் பாலிவூட் சினிமாவில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.அங்கு முன்னணி நடிகையாகவும் வலம் வருகின்றார்.

இவர் தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து இந்த வருட துவக்கத்தில் வாடகைத்தாய் மூலம் குழந்தையும் பெற்றெடுத்தார்.

இந்த குழந்தைக்கு மால்தி என பெயரிட்டனர். குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதாவது பிரியங்கா சோப்ரா பதிவிடுவார். ஒரிரு முறை குழந்தையின் புகைப்படத்தை மறைத்து வெளியிட்டுள்ளார்.தற்போது இவர் தனது கணவருடன் தங்களது கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

இந்தப் புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.இது தவிர இவர் உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக ஃபோர்ப்ஸ் இதழினால் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement