• Nov 17 2024

"ஜயோ.."என கதறி அழுத பிரியங்கா...பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட வீடியோ...நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு விருப்பானவர்கள்  என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள். அதில் தற்போது விஜய் டிவியில் மக்களின் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. இவருக்கு  ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருக்கின்றார்கள் என்றே சொல்லலாம் . இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது எனலாம்.

இதனாலேயே இவர் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனிடையே பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரவீன் குமாரும் விஜய் டிவியின் தயாரிப்பு குழுவில் பணியாற்றி இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிரியங்கா திருமணத்திற்க்கு பிறகு தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து செய்து வருகிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாகியாக தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு கலக்கபோவது யாரு என்ற நிகழ்ச்சியில் இவர் நடுவராகவும் பங்கு பெற்று இருந்தார். சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள ப்ரியங்காவிற்கு வாய்ப்பு கிடைத்து அதில் பங்கு பற்றி இருந்தார்.

இவ்வாறு அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவருக்கு என்று புதிய நட்பு வட்டாரம் கிடைத்துள்ளது.அதாவது பாவனி, அமீர் ,நிரூப் என பலர்.இவ்வாறு அடிக்கடி வெளியில் செல்லும் இவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்கள்.இவ்வாறு இருக்க நிரூப் பிரிங்காவின் கையில் கடிக்க “அம்மா ...ஜயோ...” என கத்தி அழுகின்றார்.இதனை நிரூப் தனது இன்ஸ்டாவில் பதிர்ந்துள்ளார்.இதற்கு பிரியங்கா திட்டி கெமண்ட் போட்டு இருக்கிறார்.




Advertisement

Advertisement