பிக் பாஸ் நிகழ்ச்சி 99 நாட்களை எட்டிவிட்டது. அடுத்தவாரம் இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றி பெற்றார், யார் யாருக்கு எந்தெந்த இடம் என்பது தெரிந்து விடும்.
கடந்த வாரம் நடந்த கடைசி நாமினேஷனில் அமுதவாணனைத் தவிர அசீம், விக்ரமன்,கதிர், ஷிவின், மைனா, ஏடிகே என அனைவரும் நாமினேட் செய்யப்பட்டனர், இதில், குறைந்தவாக்குகளை பெற்று ஏடிகே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.
கடைசி வரை பிக் பாஸ் வீட்டில் எதையுமே செய்யாமல் இருந்த கதிர் இன்னும் வீட்டிற்குள் இருப்பதை நினைத்து ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
இந்நிலையில்,பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய தினம் பொங்கல் பண்டிகையை கொண்டாடி உள்ளனர். இதனால் பிரபலங்கள் பலரும் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல தொகுப்பாளினியான டிடியும் என்ட்ரி கொடுத்துள்ளார். டிடியைக் கண்டதும் ஹவுஸ்மேட்ஸ் செம குஷியில் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Dhivya Darshini enters the BB House (1/2).#BiggBossTamil6 pic.twitter.com/EtYeRJGzZP
Listen News!