• Sep 20 2024

ஜீவாவின் பதிலைக் கேட்டு ப்ரியா எடுத்த அதிரடி முடிவு... அதிர்ச்சியில் ஆடிப் போன குடும்பம்... பரபரப்பான 'ஈரமான ரோஜாவே-2' ப்ரோமோ வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான் ரோஜாவே சீசன் 2.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.


இந்நிலையில் தற்போது இந்த சீரியலின் உடைய புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஜீவா ப்ரியாவிடம் "நான் எங்க அம்மா அப்பாவை விட்டிற்று தனிக்குடித்தனம் எல்லாம் என்னால் வர முடியாது" எனக் கூறுகின்றார். அதற்கு ப்ரியா "நீங்க இவ்வளவு தெளிவாக இருக்கும் போது நானும் ரொம்பத் தெளிவாக இருக்கணும், நீங்க என்கூட தனிக்குடித்தனம் வரல என்றால் நானே தனியாக ஒரு வீடு பிடிச்சு தனிக்குடித்தனம் போய்ட்டே இருப்பேன்" எனக் கூறுகின்றார். 


இவர்கள் பேசுவது அனைத்தையும் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் கேட்டு விடுகின்றனர். உடனே தேவி "நீ எடுத்தது சரியான முடிவு ப்ரியா, உன் வாழ்க்கை நல்லா இருக்கணும் என்றால் நீ தனிக்குடித்தனம் போறது தான் சரி" என்கிறார். 


Advertisement

Advertisement