• Sep 20 2024

வீட்டை விட்டுக் கிளம்பிய மனைவி... கெஞ்சிய ஜீவா... விவாகரத்து பண்ணும் அளவிற்கு முடிவெடுத்த ப்ரியா... 'ஈரமான ரோஜாவே-2' ப்ரோமோ வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.


இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ப்ரியா தான் அம்மா வீட்டிற்கு போகப்போகிறேன் எனக் கூறி முடிவெடுக்கின்றார். அங்கு இருப்பவர்கள் இந்த வீட்டை விட்டு போக வேணாம் என தடுக்கின்றனர்.

பின்னர் ஜீவா தன் மனைவி ப்ரியாவிடம் "கொலையாளிக்கு கூட நீதிமன்றம் திருந்தி வாழ வாய்ப்புக் கொடுக்கிறது, உன்னுடன் வாழ வேண்டும் அதற்கு வாய்ப்பு கொடு" என கெஞ்சி கேட்கிறார். அதற்கு உடனே ப்ரியாவும் நான் இங்கே இருக்கிறேன், இது ஜீவாவுக்கு நான் கொடுக்கிற கடைசி வாய்ப்பு. இனியும் சிறிய தவறு ஜீவா செய்தாலும் நான் அவரை விவாகரத்து செய்துவிடுவேன் என கூறி ப்ரியா ஜீவாவை எச்சரிக்கிறார்.


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement