ஏற்கனவே ‘தக்லைஃப்’ படத்தில் சிம்பு நடிக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ள நிலையில் தற்போது கமல்ஹாசனுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு விதிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு என்ன ஆகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் லிங்குசாமி தயாரிப்பில் உருவான 'உத்தம வில்லன்’ என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய தோல்வி அடைந்தது என்பது இதனை அடுத்து அந்த நஷ்டத்தை ஈடுகட்ட லிங்குசாமிக்கு இன்னொரு படம் நடித்து தருவதாக கமல் வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அந்த வாக்குறுதியை கமல்ஹாசன் 9 ஆண்டுகளாக நிறைவேற்றாத நிலையில் லிங்குசாமி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடந்தது தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்ட நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் அழைப்புக்கு கமல்ஹாசன் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த தயாரிப்பாளர்கள் கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பாக அவருக்கு ரெட் கார்ட் விதிக்க வேண்டும் என்றுவலியுறுத்துவதாக புறப்படுகிறது.
ஏற்கனவே தனது ’கொரோனா குமார்’ படத்தில் நடித்து முடித்துவிட்டு தான் ‘தக்லைஃப்’ படத்தில் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் புகார் அளித்திருந்த நிலையில் தற்போது கமல்ஹாசனுக்கும் ரெட் கார்ட் விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Listen News!