சிவகார்த்திக்கேயன் சினிமாவில் இருந்தபோதே சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்ற இலட்சியத்தோடு கிடைத்த வாய்ப்பையெல்லாம் பயன்படுத்தி இன்று சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக இருந்து வருகிறார்.
இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் மாபெரும் தோல்வியை தழுவிய நிலையில் தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் .
இந்த படத்தை இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார் . இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டிருக்கும் தகவல் தற்போதுசமூகவலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதாவது, படத்தில் சில காட்சிகளை சிவகார்த்திகேயன் மாற்ற வேண்டும் என்று கூறி இருக்கிறராம். அதற்கு இயக்குநர் மறுப்பு தெரிவித்து இருக்கிறார் என பல சர்ச்சைகள் வந்திருந்தன.
இந்நிலையில் தான் சினிமா விமர்சனம் கூறும் பிரபல யூடியூப் சேனல் ஓன்று சிவகார்த்திகேயனுக்கும் “மாவீரன்” படத்தின் இயக்குநருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத்தான் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றும் கூறியிருந்தது.
அதுமட்டுமன்றி மாவீரன் படத்தின் இரண்டாம் நாள் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே இயக்குநருக்கும் அதில் நடிக்கும் நடிகர்களுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வந்ததாகவும். நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை வணிகமாக்க விரும்பினார் ,ஆனால் இயக்குநர் அப்படி செய்ய விரும்பவில்லை. சமீபத்திய செய்தி என்னவென்றால், தயாரிப்பாளர்கள் இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளைத் தூக்கி எறிந்துவிட்டு, புதிய கதைக்களத்தில் புதிய படத்தைத் தயாரிக்கப் போகிறார்கள் என்று கூறினார்கள்.
மேலும் இதற்கு பிறகு 45 நாட்கள் ரீ ஷூட்டிங் நடைபெற உள்ளதாகவும். தற்போது உருவாகும் படம் மூன்றிலும் புதிய கதைகளை என்றும், இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட காட்சிகளில் சில மட்டும் பயன்படுத்த படலாம் என்றும், இப்படத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும், கதாநாயகனாகவும் நடிப்பதினால் அடுத்து இவர் நடிக்கும் “ராஜ் கமல் இன்டர்நெஷனல்” திரைப்படத்தை இதனால் தான் தள்ளிபோடுகிறார் என்று அந்த ஊடகத்தின் உரிமையாளர்கள் கூறினார்கள்.
இந்நிலையில் இந்த வீடியோவுக்குப் பதிலளித்து, “மாவீரன்” தயாரிப்பாளர் அருண் விஷ்வா, “எங்கள் படத்தை விளம்பரப்படுத்துவதற்கு மகத்தான முயற்சி எடுத்ததற்கு மிக்க நன்றி . உங்கள் கடின உழைப்பும் ஆராய்ச்சியும் எங்கள் குழுவின் மீதான உங்கள் அன்பைக் காட்டுகிறது எங்களுக்கு அதிக சக்தி கிடைத்துள்ளது எங்கள் இலக்கை பெரிதாக்க உங்களிடமிருந்து ஆற்றல்! என்று பதிவிட்டுருந்த நிலையில் நெட்டிசன்கள் செய்தி வெளியிட்ட யூடியூப் சேனலை விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!