நடிகர் ஜோகிபாபு மற்றும் நடன இயக்குநர் தினேஸ் மாஸ்டர் ஆகியோர் நடிப்பில் இராஜ் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் லோக்கல் சரக்கு என்கிற படம்.
இதன் ஆடியோ லாஞ் இன்று சென்னையில் நடைபெற்றது.இதற்கு சிறப்பு விருந்தினராக செல்வமணி மற்றும் தயாரிப்பாளர் ராஜன் நடிகர்கள் ராதாரவி மற்றும் சென்றாயன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருத்தராக மேடையில் பேசினார்கள்.இவ்வாறு இருக்கையில் தொடர்ந்து பேசிய இராஜேந்திரன் திரைப்படம் எடுப்பது தயாரிப்பாளர்களுக்கு டார்ஜர் என தெரிவித்திருந்தார்.அத்தோடு தான் 9 படங்களை எடுத்த போது பல அவமானங்களை சந்தித்ததாகவும் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
இவ்வாறு அவர் பேசிக்கொண்டு இருக்கையில் நடிகர் சென்றாயன் குறுக்கிட்டு டார்ஜர் என்று எப்படி சொல்வீர்கள் என கேள்வி எழுப்பினார்.உடனே நான் சொல்வது தான் உண்மை தயாரிப்பாளர்கள் எவ்வளவு கஸ்ரப்படுகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா..? என ஒருமையில் பேசினார் ராஜன்.
போய் உட்காரு உனக்கான வாய்ப்பு வரும் போது மேடையில் வந்து பேசு என்ர அனுபவம் உனக்கு இல்லை என அதட்டி பேசினார்.அதுமட்டுமல்லாது உனக்கு நான் வேலையை தருகிறேன் என ஒருமையில் பேசினார் ராஜன்.
அத்தோடு ராஜன் தயாரிப்பாளர் சரியாக கஸ்ரப்படுகிறார்கள் ஆனால் நடிகர்களுக்கு அந்த கஸ்டம் இல்லை அவர்கள் சுகபோக வாழ்க்ககையை வாழ்கிறார்கள்.இவ்வாறு இருக்கையில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கையில் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டமை பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.அத்தோடு ஆர்.கே.செல்வமணி குறுக்கிட்டு சென்றாயனை அமருமாறு கூறியதால் அங்கு பெரும் வாக்குவாதத்தை தடுக்கக் கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Listen News!