• Nov 14 2024

தனலட்சுமியுடன் கூட்டுச் சேர்ந்த ஜனனி... எதுக்குடி இவ்வளவு பேசுறீங்க... கோபத்தில் கத்தும் ஷிவின்... வெளியானது ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது 60 நாட்களைத் தாண்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் ஆரம்பத்தில் இருந்தே சண்டை,அடிதடி தள்ளுமுள்ளு, வாக்குவாதம் என போட்டியாளர்களிடையே சுவாரசியம் குறையாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.

அந்தவகையில் 21 போட்டியாளர்களுடன் ஆடம்பரமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது ஷிவின் கணேசன், அஸீம், மணிகண்டன், ரச்சிதா, ஏடிகே, அமுதவாணன், கதிரவன், தனலட்சுமி, விக்ரமன், மைனா, ஜனனி ஆகியோர் மட்டுமே எஞ்சி உள்ளனர்.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஷிவினுக்கும், தனலட்சுமிக்கும் இடையில் பயங்கர மோதல் இடம்பெற்றிருக்கின்றது. அதாவது தனலட்சுமி "நான் தோசை சுடப் போறன் என்று உங்கிட்ட சொன்னனா?" எனக் கேட்கின்றார்.

அதற்கு ஷிவின் "அப்போ எதற்கு மாவைக் கரைச்சாய்" எனக் கேட்கின்றார். உடனே "நீ ஏன் சமைக்கவே விட மாட்டேங்குறாய்" என அதட்டுகிறார் ஷிவின். அதற்கு ஷிவின் "எதுக்குடி இப்போ இந்த விஷயத்தில இப்படி பேசுறீங்க" எனக் கேட்கின்றார். 

அதற்கு ஜனனி அமுதவாணனிடம் ஷிவின் பற்றி எதோ கூறுகின்றார். அத்தோடு இனிமேல் இதைப்பற்றி 2பேரும் பேசாதீங்க என ஷிவின் கத்துகின்றார். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement