• Sep 20 2024

அபியை தூக்கி நடுக் கடலிற்குள் வீசிய ரவுடிக் கும்பல்... காப்பாற்றப் போராடும் வெற்றி... தன்னந் தனியாக மாட்டிய ஜோடி... அதிரடியாக வெளிவந்த ப்ரோமோ வீடியோ...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் 'தென்றல் வந்து என்னைத் தொடும்'. மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலும் அதிரடித் திருப்பங்களோடு அட்டகாசமாக சென்று கொண்டிருக்கின்றது. 

இந்நிலையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஜெயிலில் இருந்து தப்பிய ரவுடி வெள்ளை ராஜா கும்பல் அபியை நடுக் கடலிற்குள் கடத்தி வைத்திருக்கின்றனர்.


அந்த சமயம் பார்த்து வெற்றி படகில் வருகின்றார். வெற்றியைப் பார்த்ததும் அந்த ரவுடிக் கும்பல் அபியைத் தூக்கி கடலிற்குள் எறிகின்றனர். பின்னர் வெற்றி கடலிற்குள் குதித்து அபியைக் காப்பாற்றுகின்றார். ஆனால் கிளம்பும் நேரத்தில் படகில் இருந்த டீசல் தீர்ந்து போகின்றது. இந்நிலையில் இவர்கள் இருவரும் தன்னந்தனியாக நடுக் கடலிற்குள் மாட்டி இருக்கின்றனர். 


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement