• Nov 19 2024

பிரபு வீட்டில் வெடித்த சொத்து பிரச்சினை-உயர்நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இன்று வரை அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் தான் நடிகர் சிவாஜி. இவருக்கு பிரபு,ராம்குமார் என இரு மகன்களும் சாந்தி,ராஜ்வி என இரு மகள்களும் உள்ளனர்.பிரபு, ராம்குமார் இருவருமே படங்களில் நடித்துள்ளனர் அது அனைவருக்கும் தெரிந்த விடயம். பிரபு தற்போது வரை பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ராம்குமார், தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சிவாஜி, பிரபுவை தொடர்ந்து மூன்றாம் தலைமுறையாக நடிகர் விக்ரம் பிரபுவும் தற்போது பிரபல ஹீரோவாக பல படங்களில் நடித்து பட்டையை கிளப்பி வருகின்றார்.

கடந்த 2001ம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின், 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளனர்.

மேலும் இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தம் காரணமாக தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளதால் பாகப்பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டுமெனக் கோரியுள்ளனர்.அத்தோடு , தங்களுக்கு தெரியாமல் தந்தை சொத்துக்களை விற்றுள்ளதாகவும், அந்த விற்பனை பத்திரங்களை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சிவாஜியின் மகள்கள் தொடுத்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்துள்ளது. சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும் 2010ம் ஆண்டிலேயே கைமாறி விட்டதாகவும், கட்டுமானம் முடித்த பிறகும், அவர்கள் குடும்ப பிரச்னை காரணமாக குடியிருப்புகளை விற்க முடியாத நிலையில் இருப்பதாக தனியார் கட்டுமான நிறுவனமான அக்‌ஷயா ஹோம்ஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும் நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் தரப்பில், அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் தற்போது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்களான சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பில், வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

அத்தோடு இது மட்டுமல்லாமல் இந்த வழக்கில் நடிகர் பிரபு மற்றும் ராம்குமாரின் மகன்களாக நடிகர் விக்ரம் பிரபு மற்றும் நடிகர் துஷ்யந்த் ஆகியோரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்

Advertisement

Advertisement