• Nov 14 2024

விபச்சாரத்தை தமிழ்நாட்டில் சட்டமாக்க வேண்டும்.. வரலக்‌ஷ்மி சரத்குமார் பட இயக்குநரின் பரபரப்பு பேச்சு!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிப்பில் வெளியாகி உள்ள V3 படத்தை இயக்கிய இயக்குநர் அமுதவாணன் தமிழ்நாட்டில் விபச்சாரத்தை சட்டமாக்க வேண்டும் என பேசியிருப்பது பெரும்  பரபரப்பை கிளப்பி உள்ளது.

யசோதா படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து மிரட்டிய நடிகை வரலக்‌ஷ்மி இந்த வி3 படத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி எனும் ரோலில் நடித்துள்ளார்.எனினும் சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரெட் லைட் ஏரியா இல்லாததால் அதிகமான பாலியல் பலாத்காரங்கள் நடப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை இயக்குநர் அமுதவாணன் முன் வைத்துள்ளார்.

வரலக்‌ஷ்மி சரத்குமார், எஸ்தர் அனில் மற்றும் ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள V3 படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. V3 டைட்டிலுக்கான அர்த்தம் விந்தியா, விக்டிம், வெர்டிக்ட் (Vindhya, Victim, Verdict) என்பது தான். பாலியல் பலாத்காரத்தை மையமாக வைத்துத் தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.


அப்பாவிப் பெண்ணான விந்தியாவை (பாவனா) 5 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தை விசாரிக்க ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான வரலக்‌ஷ்மியிடம் வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. அந்த குற்றவாளிகளிடம் இருந்து வாக்குமூலம் வாங்குவது தான் படத்தின் கதை. மேலும் இந்த படம் ஹைதராபாத்தில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதா என்கிற கேள்விக்கு இயக்குநர் அமுதவாணன் இந்தியா முழுவதும் பல இடங்களில் நடைபெற்ற நிஜ சம்பவங்களின் அடிப்படையில் தான் இந்த படத்தை எடுத்துள்ளேன் என்று கூறினார்.

அத்தோடு மும்பை மற்றும் கொல்கத்தாவில் இருப்பது போல அங்கீகரிக்கப்பட்ட ரெட் லைட் ஏரியாக்கள் தமிழ்நாட்டில் இல்லை.அத்தோடு இந்தியாவின் பல மாநிலங்களிலும் இல்லை. அதன் காரணமாகத்தான் ஏகப்பட்ட பாலியல் குற்றங்கள் தினம் தோறும் நடக்கின்றன. தமிழ்நாட்டில் விபச்சாரத்தை சட்டப்படி அங்கீகரித்தால் பாலியல் குற்றங்கள் பெருமளவில் குறையும் என இயக்குநர் அமுதவாணன் தெரிவித்துள்ளார்.


ரெட் லைட் ஏரியா இருக்கும் இடங்களை சுற்றி உள்ள 20 கி.மீ., ரேடியஸ் இடங்களில் பாலியல் குற்றங்கள் ரொம்பவே குறைவாக உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன என்றும் தனது வாதத்தை முன் வைத்த அமுதவாணன் கள்ளச்சாராயம் குடித்து இறப்பதை தடுக்க எப்படி அரசே டாஸ்மாக் எடுத்து நடத்துகிறதோ அதே போல இந்த விஷயத்துக்கும் அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என பேசியுள்ளார்.


இங்கே இருப்பவர்கள் ஏகப்பட்ட பேர் தாய்லாந்து பட்டாயவிற்கு போகலையா என்ன? அங்கே என்னவெல்லாம் நடக்கிறது என்பதை நேரடியாக சென்றே பார்த்துள்ளேன்.அத்தோடு நம்ம ஊரிலும் பாலியல் கல்வி மற்றும் விபச்சார விடுதிகளுக்கு அங்கீகாரம் வழங்கினால் நிச்சயம் இந்த குற்றம் குறையும் என நம்புவதாக அமுதவாணன் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement