• Sep 21 2024

PS-2 ரிலீஸ் தேதி மாற்றப்படுகின்றதா..? தீயாய் பரவும் தகவல்... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான ஒரு திரைப்படமே 'பொன்னியின் செல்வன்'. இவரின் கனவு திரைப்படமான இப்படமானது கடந்த வருடம் உலகமெங்கும் ரிலீஸ் ஆனது.


அதாவது கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' என்ற நாவலை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். 

திரைப்பிரபலங்கள் பலரும் நடித்துள்ள இப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக த்ரிஷாவும், ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரமும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், பெரிய பழுவேட்டயராக சரத்குமாரும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜும், ஆழ்வார்கடியான் நம்பியாக ஜெயராமும் நடித்து அசத்தியிருந்தனர்.


மிகப்பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான இப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு, சிறந்த விமர்சனங்களும் கிடைத்தமையை தொடர்ந்து வசூல் ரீதியாகவும் இப்படம் சாதனையை புரிந்திருந்தது.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2-ஆவது பாகம் தற்போது உருவாகி வருகின்றது. அந்தவகையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் திடீரென 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் ஒன்று வெளியானது. அதாவது அப்படத்தின் உடைய கிராபிக்ஸ் பணிகள் முடிய தாமதம் ஆவதால் ரிலீஸ் தேதியை சற்று தள்ளிவைக்க படக்குழு முடிவெடுத்து உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த விடயத்தினை தற்போது படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

அந்தவகையில் 'பொன்னியின் செல்வன் 2' அறிவித்தபடி ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த மாதம் முதல் பொன்னியின் செல்வன் படத்தின் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. அத்தோடு இந்த மாதம் படத்தினுடைய பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.


மேலும் அடுத்த மாத முதல் வாரத்தில் டீசரும், அதனோடு அடுத்த மாத இறுதியில் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவும் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் முழுவதும் அனைத்து நடிகர்களையும் வைத்து புரமோட் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement