• Nov 10 2024

பூர்ணிமா நட்பு விவகாரம்; இந்துஜா போட்ட திடீர் பதிவு! அதிர்ச்சியில் அட்வைஸ் பண்ணும் ரசிகர்கள்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ்  சீசன் 7ல் ஒருசில தினங்களுக்கு முன் பிக் பாஸ் வீட்டிற்கு பார்க்கிங் திரைப்படத்தின் ஹீரோ ஹரிஷ் கல்யாண்,  ஹீரோயின் இந்துஜா அவர்களும் வருகை தந்திருந்தார்கள். எனினும், இந்துஜாவின் உயிர் தோழியான பூர்ணிமாவை பெரிதாக கண்டுகொள்ளாதது பூர்ணிமா ரவியை மனமுடைய வைத்திருக்கிறது.  

நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் 'மேயாத மான்' படத்தின் மூலம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒருவர். இவர் இதுவரை தளபதி விஜய்யுடன் 'பிகில்' படத்திலும், தனுஷுடன் செல்வராகவனின் 'நானே வருவேன்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.


ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த வார புதிய திரைப்படமான 'பார்க்கிங்' படத்தில் இந்துஜா முக்கிய பெண் நாயகி. இப்படம் ஏற்கனவே பத்திரிகை நிகழ்ச்சிகளில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கிடையில், முன்னாள் 'பிக் பாஸ்' போட்டியாளர் ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா ஆகியோர் 'பார்க்கிங்' விளம்பரத்திற்காக 'பிக் பாஸ் தமிழ் 7' இல் நுழைந்தனர். சர்ச்சைக்குரிய போட்டியாளர் பூர்ணிமா பின்னர் தனது நெருங்கிய கல்லூரி தோழியான இந்துஜா தன்னை புறக்கணித்ததாக தனது ஏமாற்றத்தை மாயாவிடம் பகிர்ந்து கொண்டார்.


இதை தொடர்ந்து இந்துஜாவின் சமூக வலைத்தளங்களை நோட்டமிட்ட ரசிகர்கள் அவர் பூர்ணிமாவை அன் ஃபாலோ செய்து விட்டார் என ஆதாரத்தை வெளியிட்டு வருகிறார்கள். 

இந்த நிலையில், தற்போது நடிகை இந்துஜா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் புகைப்படங்களை வெளியிட்டு அதற்கொரு கேப்சன் போட்டுள்ளார். அது பிக் பாஸ் வீட்டிலுள்ள பூர்ணிமா பிரச்சனைக்கு ரியாக்ட் செய்யும் விதமாக அமைந்துள்ளது.


அதன்படி, அவர் வெளியிட்டுள்ள பதிவில், ' சரியானதை செய்ய நேரம் எப்போதும் சரியானது' என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள்  நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடுநிலை தன்மையோடு நடந்து கொண்டது பாராட்டுக்குரியது என குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை, இன்னும் சில ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற போது பூர்ணிமா தவறான வழியில் செல்வதை சுட்டிக்காட்டி அவருக்கு அறிவுரை வழங்கி இருக்கலாம். என்ன தான் இருந்தாலும் அவர் உங்களின் உயிர் தோழி தானே என  இந்துஜாவுக்கு அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.


 

Advertisement

Advertisement