• Sep 21 2024

திடீரென வெளிநாட்டுக்குக் கிளம்பிய குக்வித் கோமாளி புகழ்- ஏர்ப்போட்டில் கட்டிப்பிடித்து அழுத அவரது காதலி

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் காமெடி ஷோவான Kpy சாம்பியன் என்ற நிகழ்ச்சியில் காமெடியனாக கலந்து கொண்டவர் தான் புகழ். இதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வந்தாலும் இவருக்கென்று தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்த ஷோ என்றால் அது குக்வித் கோமாளி ஷோ தான்.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு சீசன்களிலும் கோமாளியாகப் பங்கு பற்றி பிரபல்யமடைந்த இவர் தற்பொழுது முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடியனாகவும் சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகின்றார். இவர் சில மாதங்களுக்கு முதல் தனது காதலியான றியாவை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அத்தோடு புகழ் மக்கள் மத்தியில் ரீச் ஆவதற்கு முன்னரே றியாவை சந்தித்து விட்டதாகவும் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்தார். தொடர்ந்து தனது காதலியுடன் வெளியில் செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றார்.

இந்த நிலையில் இவர் நடித்து வரும் ஸூ கீப்பர் என்னும் படத்தின் படப்பிடிப்பிற்காக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு கிளம்பியுள்ளார். அப்போது அவரை பிரிய மனமில்லாமல் காதலியான ரியா ஏர்ப்போட்டில் அவரை கட்டிப்பிடித்து கண்ணீர் சொரிந்து வழியனுப்பி வைத்திருக்கின்றார்.

இது குறித்த வீடியோவை புகழ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் நான் இந்த முறை தான் தனியாக வெளிநாடு செல்கின்றேன். என்னோட ஒவ்வொரு பயணத்திலும் மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜி இருப்பார். அவர் இல்லாத முதல் பயணமாக இருப்பதால் மனம் கவலையடைகின்றது எனவும் உருக்கமான பதிவு ஒன்றினை போட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement