• Sep 20 2024

ஆர். ஜே பாலாஜி வீட்ல விசேஷம் திரைப்படத்தின் ‘ஊரே சிரிக்குதுப்பா பாடல் ரிலீஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் தான் ஆர். ஜே பாலாஜி. பல திரைப்படங்களில் காமெடியனாக நடித்ததை அடுத்து கதாநாயகனாகவும் சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் இவரது நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘வீட்ல விசேஷம்’.இப்படத்தில் சத்யராஜ் ஊர்வசி ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்

அதாவது வீட்டில் கல்யாண வயதில் மகன் இருக்கும்போது அவர்களின் அம்மா கர்ப்பமாவதால் ஏற்படும் பிரச்சனைகளே இந்த படத்தின் கதை. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகியுள்ளது. வீட்ல விஷேசம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் ஜுன் 17 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் ஐபிஎல் போட்டியின் போது வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லர் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. இதையடுத்து தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள டாடி பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement