தம்பிக்கோட்டை படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். இதையடுத்து விஜய் ஆண்டனியின் சலீம், விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை போன்ற படங்களை தயாரித்த அவர், கடந்த 2016-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.
எனினும் இதன் பின்னர் மருது, ஸ்கெட்ச், பில்லா பாண்டி, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பிரபல இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘விசித்திரன்’.
மேலும் இந்த படத்தில் பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ், கதாநாயகனாக நடித்துள்ளார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த ‘ஜோசப்’ படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.
மலையாளத்தில் இயக்கிய பத்மகுமார்தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார். இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷுக்கு ஜோடியாக பூர்ணா, மதுஷாலினி என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். ஆர்.கே.சுரேஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்.
ரிலீசுக்கு தயாராகியுள்ள இந்த படம் வரும் மே 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் தற்போது டிரெய்லர் வெளியாகியுள்து.
மேலும் இந்த டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் சீனு ராமசாமி இணைந்து வெளியிட்டுள்ளனர். த்ரில்லர் க்ரைம் கதைக்களத்தில் மிரட்டல் நடிப்பை ஆர்.கே.சுரேஷ் வெளிப்படுத்தியுள்ளார். இந்த டிரெய்லருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பிறசெய்திகள்:
- படு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்
- காத்து வாக்குல ரெண்டு காதல் படம் தமிழக வசூல் விவரம்- எத்தனை கோடி தெரியுமா..?
- பார்வதியை டார்ச்சர் செய்யும் விக்கி…சந்தியா எடுத்த முடிவு – இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- மறைந்த நடிகை சித்ராவின் பிறந்தநாள்-வைரலாகும் ரசிகர்களின் பதிவு..!
- ஏ .ஆர்.ரகுமான் அமர்ந்து கொண்டு இருக்கும் போதே மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்..!
சமூக ஊடகங்களில்:
Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!