விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த மாதங்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது . இதில் சரவணன் மீனாட்சி என்னும் சீரியல் மூலம் பிரபல்யமான ரச்சிதாவும் கலந்து கொண்டார்.ரச்சிதாவுக்கும் தினேஷிற்கும் சில ஆண்டுகளுக்கு முதல் திருமணம் ஆனது.
ஆனால், இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இப்படி ஒரு நிலையில் ரக்ஷிதா தன் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார் என்று சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.ஆனால், இதுகுறித்து பேசிய தினேஷ் என்னை பொறுத்தவரைக்கும் எங்கள் இடையிலான பிரிவு தற்காலிகமானதுதான். மற்றபடி நான், ரச்சிதா இருவரும் ஒரு சட்ட பூர்வமாக பிரிவதற்கான எந்த ஒரு முயற்சியையும் இந்த நிமிஷம் வரைக்கும் எடுக்கவில்லை என்று கூறி இருந்தார்.
ஆனால் ரச்சிதா பிக் பாஸுக்கு பின்னரும் தன் கணவர் குறித்து எந்த ஒரு விஷயத்தையும் பேசாமல் இருந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் ரச்சிதா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மும்பை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில் ‘தனியாக வாழும் பெண்களும் வேலை செய்யும் பெண்களும் இனி குழந்தையை தத்தெடுத்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை பகிர்ந்து ‘இது போதும். இதில் இனிமேல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று பதிவிட்டுள்ளார்.’
ஏற்கனவே பிக் பாஸில் ஒரு எபிசோடில் விக்ரமனிடன் பேசிய ரச்சிதா, நான் என்னோட 35 வது வயதில் தான் ஒரு குழந்தையை தத்து எடுப்பேன் என்று ஒரு இருந்தார். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸுக்கு பின்னர் ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்ற ரச்சிதா ‘குழந்தை என்றாலே எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஆசை தான் எனக்கும் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் அதுவும் பெண் குழந்தைகளை பார்த்தாலே நான் வீழ்ந்து விடுவேன் குழந்தைகளை எப்படி பார்க்கிறேனோ அதேபோலத்தான் இங்கு இருக்கும் பெரியவர்களையும் பார்க்கிறேன்’ என்று பேசி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!