• Nov 17 2024

ஈஸ்வரியை வீட்டை விட்டு துரத்தியடிக்கும் ராதிகா.. அதிர்ச்சியில் திணறும் கோபி

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கிச்சனில் எல்லாரும் வேலைகள் பார்த்துக் கொண்டிருக்க அங்கிருந்த ஜெனி நானும் ஏதாவது செய்யட்டுமா என்று கேட்டு பீன்ஸ் கட் பண்ணுகிறார். இதை பார்த்து செல்வி கலாய்க்க, அவர் ரூமுக்கு எழுந்து சென்று விடுகிறார்.

மறுபக்கம் ராதிகாவிடம் கமலா ஈஸ்வரி போனில் பேசிய விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்க அங்கு வந்த ஈஸ்வரி ஒட்டு கேட்டு அத உன் பொண்ணு கிட்ட அப்படியே சொல்லிட்டு இருக்கியா என்று வம்பு இழுக்கிறார். அதற்கு நான் ஒன்றும் ஒட்டுக்  கேக்கல ஊருக்கே கேக்குற மாதிரி தான் நீங்க பேசுனீங்க என்று கமலா பதிலடி கொடுக்க, ஈஸ்வரிக்கும் கமலாவுக்கும் வாக்குவாதம் உருவாகிறது.

அங்கு வந்த கோபியுடன் இப்படித்தான் என்கிட்ட சண்டை போட்டுட்டு இருக்காங்க என்று சொல்ல, உங்க அம்மா காலைல மயங்கி விழுந்தது போல நடிச்சாங்க என்று கமலா சொன்னதும், கோபி ஏன் இப்படி எங்க அம்மாவை போட்டு டார்ச்சர் பண்ணுறீங்க என்று கோபப்படுகிறார்.


அடுத்ததாக எழில் படத்தில் நடிக்க செல்வி வாய்ப்பு கேட்க ஜெனி அதெல்லாம் கொடுக்காத என்று சொல்கிறார். அதற்கு ஏன் நான் நடிகையானா உங்க வீட்டுக்கு வேலைக்கு வரமாட்டேன் என்று பார்க்கிறாயா? நான் ஸ்கூல் படிக்கும்போதே கட்டபொம்ம விஷம் போட்டு நடிச்சிருக்கன் என்று சொல்லி நடித்துக் கொண்டு மானங்கெட்டவனே என்று சொல்லித் திரும்பும் போது, செழியன் அங்கு வந்து நிற்க ஷாக் ஆகிறார். அதற்குப் பிறகு செழியன் எழிலுக்கு ஸ்வீட் ஊட்டி வாழ்த்து சொல்கிறார். ராமமூர்த்தியும்  சத்தம் கேட்டு வெளிய வருகிறார்.

இதன் போது உடம்பு பரவா இல்லையா என்று செழியன் கேட்க, பரவால அமிர்தா பாத்துக்கிட்டா என்று சொன்னதும் ஜெனி அப்ப நான் பார்த்துக்கலையா என்று கேட்கிறார். பிறகு பாக்கியா ஜெனிக்கு சாப்பாடு கொடுத்து, நீ குழந்தையை பார்த்துக் கொள்ளணும். நல்லா ரெஸ்ட் எடுக்கணும் என்று தான் உனக்கு எந்த வேலையும் சொல்றதில்லை ரெஸ்டாரண்ட் விஷயமா ஏதாவது வேலை இருந்தா உன்கிட்ட தான் வந்து சொல்றேன். அங்கு வேலை வரும் போது கண்டிப்பா உன்கிட்ட சொல்லுவேன் என சமாதானம் செய்கிறார்.

மறுபக்கம் ராதிகா ரூமுக்குள் கோபமாக இருக்க, கோபி உள்ளே வந்ததும் உங்க அம்மா சொன்னதுக்கு மட்டும் கேட்டுட்டு என்கிட்ட சத்தம் போடுறீங்க நாளைக்கு காலைல உங்க அம்மா எங்க வீட்ல இருக்க கூடாது என்று சொல்ல, கோபி ஷாக் ஆகிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement