• Sep 20 2024

இளம் நடிகையுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை ராதிகாவுடன் பிரபல இளம் நடிகை இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் 80களில்  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்து கொடி கட்டிப் பறந்த முக்கிய நடிகை தான் ராதிகா. அவர் ரஜினி கமல் விஜய்காந்த் சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகின்றார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இது தவிர சின்னத்திரையிலும் பல சீரியல்களை தனது  ராடான் நிறுவனம் மூலம் தயாரித்து வருகின்றார்.

மேலும் சித்தி வாணி ராணி போன்ற சீரியல்களில் கதாநாயகியாக நடித்திருக்கின்றார் என்பதும் முக்கியமாகும்.பிலிம்பேர் விருதுகள், மாநில விருது என பல விருதுகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் ராதிகா, எம்.ஆர். ராதா அவர்களின் மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான்.

இந்நிலையில் நடிகை ராதிகா இளம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டு  sweetheart என பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு...



Advertisement

Advertisement