• Sep 20 2024

இனியா முன்னாடி கோபியை ஓங்கி அடித்த ராதிகா- வலியால் துடித்த கோபி- வெளியாகிய வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இந்த வருடத்திற்கான பெஸ்ட் சீரியல் அவார்ட்டையும் பெற்றது. அத்தோடு பெஸ்ட் ஹீரோயின் பெஸ்ட் வில்லன் எனப் பல விருதுகளை சீரியல் அள்ளிக் குவித்தது.

இது ஒரு புறம் இருக்க இந்த சீரியலில் இப்போது கோபியும் ராதிகாவும் பாக்கியா வீட்டில் இருந்து அடிக்கடி மோதலில் ஈடுபட்டுக் கொண்டு வருவது மட்டுமன்றி தற்பொழுது மயூவும் வந்து விட்டதால் ஈஸ்வரி கடும் கோபத்தில் இருக்கின்றார்.

இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது யார் வீட்டை விட்டு வெளியேறப் போகின்றார்கள். கோபி யாருடன் வாழப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாகவுள்ளது.

இந்த நிலையில் தற்பொழுது ஓர் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் இனியா ராதிகாவையும் கோபியையும் பேச விடாமல் தனக்கு படிப்பு சொல்லித் தரும் படி சொல்கின்றார். இதனால் கடுப்பான ராதிகா கோபி மீது துாக்கத்தில் கைபோடுவது போல பலமாக அடித்து விடுகின்றார். இந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement