• Nov 19 2024

பாக்கியாவை வீட்டை விட்டு துரத்திய ராதிகா- எதுவும் செய்ய முடியாமல் திணறிய கோபி- ஈஸ்வரி எடுத்த முடிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கோபி வீட்டுக்கு வந்த ராதிகாவிடம் ஈஸ்வரி நீ கோபி ட்ரெஸ் எல்லாம் கொண்டு வந்திருக்கிறியா நானே ஆளை விட்டு எடுக்கணும் என்று நினைச்சேன் நீயே கொண்டு வந்து தந்திட்டியா என கேட்க ராதிகா இனு என்னோட ட்ரெஸ். கோபி இங்க இருக்கிறதால நானும் இங்க தான் இருக்கப் போகிறேன் என்று கூறுகின்றார்.


இதனால் அனைவரும் அதிர்ச்சியடைய பாக்கியா ஈஸ்வரியிடம் சொல்லுங்க அத்தை இப்போ நான் என்ன பண்ணனும் என்று சொல்ல ராதிகா பாக்கியாவைப் பார்த்து வெளியே போ நான் தான் கோபியின் வைஃப். இது அவரோட குடும்பம்  நான் தான் இங்க இருக்கணும் நீ வெளியே போ என கலைக்கின்றார்.

இதனால் ஆத்திரமடைந்த எழில் நீங்க வெளியெ போங்க என்று கூற ஈஸ்வரியும் நீ என்ன தான் சொன்னாலும் பாக்கியா தான் என்னோட மருமகள் உனக்கு உந்த உரிமையும் இல்லை நீ போ வீட்டைட விட்டு என சொல்ல ராதிகா கோபி கட்டின தாலி என் கழுத்தில இருக்கும் போது நான் எதுக்கு போகணும் என்று கேட்கிறார்.


இதனால் கோபி ராதிகாவை உள்ளே கூட்டிட்டு போய் சமாதானம் செய்ய முயற்சிக்க ராதிகா கோபியை கண்டபடி திட்டுகின்றார். கோபி எவ்வளவு சமாதானம் செய்தும் ராதிகா கேட்கவே இல்லை. பின்னர் வெளியே வந்து நான் இங்க தான் இருப்பேன். நான் இங்க இருக்கிறது பிடிக்காதவங்க தான் இந்த வீட்டை விட்டு வெளியேறனும் என்று ராதிகா சொல்கிறார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement