• Sep 20 2024

வானவில் போன்று ஜொலிக்கும் ரம்யா... அடடே காதில நீளமான தோடு வேற இருக்கே... வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் சேனல்களில் அதிகளவில் மக்கள் மனங்களில் இடம்பிடித்த தொலைக்காட்சி என்றால் அது விஜய் டீவி தான். இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் யாவும் மக்கள் மத்தியில் உடனே ரீச் ஆகிவிடும். அவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்றே 'குக்வித் கோமாளி'. இந்த ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதுமட்டுமல்லாது இவர் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் உறவினர் என்பதும் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.


தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர் 'டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கின்றார்.


அதனைத் தொடர்ந்து 'பிக்பாஸ்' நிகழச்சியில் நான்காவது சீசனில் கலந்து கொண்ட இவருக்கு பட்டி தொட்டி எல்லாம் ரசிகர் கூட்டங்கள் உருவாகத் தொடங்கின. 


இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் தற்போது 'இடும்பன் காரி, நண்பகல் நேரத்து மயக்கம்' உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் நண்பகல் நேரத்து மயக்கம் படம் மூலம் மலையாள திரையுலகிற்குள் முதன்முதலாக அறிமுகமாக இருக்கின்றார். 


படங்களைத் தொடர்ந்து ரம்யா பாண்டியன் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்ற ஒருவர். அவ்வப்போது விதம் விதமான உடைகளை அணிந்து போட்டோ ஷூட்களை நடத்தி வரும் இவர் தற்போதும் சேலை அணிந்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றார். இதற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருவதோடு கமெண்டுகளால் ஜொள்ளு விட்டும் வருகின்றனர்.


அதாவது பல வண்ண நிறக் கலவையான சேலையில் ரம்யா கொடுத்துள்ள கிளாமர் போஸ்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதில் இவர் கையில் கடிகாரமும், காதில் நீளமான தோடும் அணிந்து கிக் போஸ்ட் கொடுத்துள்ளார்.

Advertisement

Advertisement