கடந்த 2000ம் ஆண்டு வெளியான என்னவளே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமகமாகியவர் தான் நடிகை சினேகா. இப்படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார்
அதன் படி தமிழில் ஆனந்தம், பார்த்தாலே பரவசம் ,புன்னகை தேசம், உன்னை நினைத்து ,விரும்புகிறேன், கிங் ,ஏப்ரல் மாதத்தில், வசீகரா, பார்த்தீபன் கனவு, ஆட்டோகிராப் ,சின்னா, பாண்டி, குசேலன், சிலம்பாட்டம் என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
மேலும் நடிகர் பிரசன்னாவைத் திருமணம் செய்ததை அடுத்து சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் தற்பொழுது மீண்டும் நடித்து வருகின்றார். இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த பட்டாசு படத்தில் நடித்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தற்பொழுது பேர்பிள் கலரில் வித்தியாசமான மாடன் உடை அணிந்து போட்டோ எடுத்து அதனை பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருவதைக் காணலாம்.
Listen News!