சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் வெற்றியால் செம்ம எனர்ஜியாக கம்பேக் கொடுத்துள்ள ரஜினி நடிப்பில், லால் சலாம், தலைவர் 170, தலைவர் 171 படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.
இதில் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம், 2024 பொங்கலுக்கு வெளியாகிறது.அதன் தொடர்ச்சியாக தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் தற்போது நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வருகிறது.
இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 171வது படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படம் லோகேஷின் LCU-ன் கீழ் உருவாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என லோகேஷ் கூறிவிட்டார்.
இப்படத்தின் முதற்கட்ட பணிகளில் லோகேஷ் ஈடுபட்டுள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் துவக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என லோகேஷ் கூறியுள்ளார். இப்படத்தில் ரஜினியை தவிர்த்து வேறு யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என இதுவரை அறிவிக்கவில்லை.
ஆனால், தற்போது சுட சுட வந்துள்ள செய்தி என்னவென்றால், தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் தன்னுடைய மாஸ்டர் படத்தில் வரும் வில்லன் பவானி கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸை முதன் முதலில் நடிக்க வைக்க அணுகியுள்ளார். ஆனால், அவருடைய கால்ஷீட் கிடைவில்லை என்பதால் தான் அவருக்கு பதிலாக விஜய் சேதுபதியை நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
இப்படத்தில் ராகவா லாரன்ஸ்வில்லன் கதாபாத்திரத்தில் கண்டிப்பாக நடிப்பார் என கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.
Listen News!