• Sep 21 2024

சந்திரமுகி 2 திரைப்படம் குறித்து ராகவா லாரன்ஸ் போட்ட முக்கிய பதிவு- குவியும் பாராட்டுக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் சந்திரமுகி. இந்தத் திரைப்படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாப்பாத்திரத்திலும் இவருடன் இணைந்து பிரபு ,நாசர் ,ஜோதிகா ,நயன்தாரா ,வடிவேலு எனப் பலர் நடித்திருந்தனர்.

இப்படமானது அந்த காலத்தில் சூப்பர் ஹிட்டாக ஓடியது. இதன்பின் இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை நடிகர் ராகவா லாரன்ஸ் எடுக்கவுள்ளதாக நேற்றைய தினம் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் இப்படம் குறித்து ராகவா லாரன்ஸ் முக்கிய பதிவு ஒன்றினை போட்டுள்ளார். அதாவது தனது அடுத்த புரஜெக்ட் சந்திரமுகி 2 என்றும் இப்படத்தில் வடிவேலு மீண்டும் இணைந்துள்ளதாகவும் கூறினார். அத்தோடு இப்படத்தின் தலைப்பை தந்தமைக்கு சிவாஜி புரடெக்ஷனுக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு எனது குரு ரஜினி சேருக்கும் நன்றி. இப்படத்தின் இயக்குநராக பி. வாசு கடமையாற்றுவதாகவும் படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைப்பதாகவும் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement