ராகவா லாரன்ஸ் மற்றும் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ஜிகர்தண்டா 2 . இத்திரைப்படம் முந்தைய பாகத்துக்கும் இப்போது உருவாகும் படத்துக்கும் சம்மந்தம் இல்லை என்று இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.
இந்த திரைபடத்தின் ஷுட்டிங் முடிந்துள்ள நிலையில் தீபாவளிக்குப் படம் ரிலீஸ் ஆகிறது என தகவல்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் இன்று நண்பகல் 12.12 மணிக்கு இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகவுள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அறிவித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் “மாமதுர” என தலைப்பிடப்பட்டுள்ள நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையில் விவேக் வரிகளில் உருவாகியுள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ் ரசிகர்கள் இப்பாடலுக்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்
Listen News!