• Sep 20 2024

ராகவா லாரன்ஸின் மனைவி இவர் தானா..? வெளியான திருமணப் புகைப்படம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர், இயக்குநர், நடிகர் எனப் பன்முகத் திறமை கொண்டுள்ள ராகவா லாரன்ஸ் இப்போது கை நிறைய படங்களை வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் இவர் நடித்த ருத்ரன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்றது.


இதனையடுத்து இவரின் நடிப்பில் வெளியாகவுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் இவரின் குடும்ப வாழ்க்கையை எடுத்துப் பார்த்தால் லதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினருக்கு ராகவி லாரன்ஸ் எனும் மகள் ஒருவர் இருக்கிறார்.


அந்தவகையில் தற்போது ராகவா லாரன்ஸ் மற்றும் லதாவின் திருமணம் புகைப்படம் ஒன்று  வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.!


Advertisement

Advertisement