• Sep 20 2024

காவேரியை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் பண்ணும் நிவின்... நேரடியாகப் பார்த்த ராகினி... வெடித்தது புதுப் பிரச்சினை... பரபரப்பான திருப்பங்களுடன் 'மகாநதி'..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று தான் 'மகாநதி'. ஏனைய சீரியல்களை போலவே இந்த சீரியலும் அதிரடித் திருப்பத்துடன் அழகாக நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. 

இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ராகினியை பெண் பார்ப்பதற்காக பெற்றோர்களுடன் நிவின் செல்கின்றார். ராகினியைப் பார்த்து அவர் அழகில் நிவினின் பெற்றோர் பூரித்துப் போகின்றனர். இருப்பினும் நிவினுக்கு ராகினியை திருமணம் செய்து கொள்வதில் சுத்தமாக உடன்பாடு இல்லை. 


ராகினி வீட்டில் இருக்கும் போது காவிரி அனுப்பிய மெசேஜை நிவினின் அம்மா பார்த்து விடுகின்றார். அதனை அளிக்குமாறு கூறி போன் பாஸ்வேர்ட் கேட்கின்றார்.

இதனையடுத்து பின்னர் காவேரியை சென்று நிவின் சந்திக்கிறார். அந்த சமயத்தில் காவிரியும் நிவினும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு நிற்பதை ராகினி தற்போது பார்த்து விடுகிறார்.


இதனால் அடுத்தடுத்த கலவரங்கள் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement