இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாடல்களாலும், இசையாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த இசையமைப்பாளராக வலம் வருகிறார். அதுமட்டுமல்லாது சமீபகாலமாக பல இசைக்கச்சேரிகளையும் நடாத்தி வருகின்றார்.
அந்தவகையில் சமீபத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் இவரின் மறக்குமா இசை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இதனால் பெரும் ஆர்வமுடன் இசை நிகழ்ச்சிக்கு சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதாவது இந்த கச்சேரிக்கு மொத்தமாகவே 35 ஆயிரம் டிக்கெட்ஸ் தான் ஒதுக்கப்பட்டுள்ளதாம். ஆனால் இவர்கள் சுமார் 2 முதல் 3 லட்சம் டிக்கெட்ஸ்களினை விற்றிருந்தனர்.
இதனால் குறித்த இசைக்கச்சேரி நடந்த இடத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிக்காக கோல்ட் டிக்கெட் ரூ. 2000, பிளாட்டினம் மற்றும் டைமண்டு போன்ற டிக்கெட்களின் விலை ரூ. 5000 அதற்கும் மேல் என டிக்கட்டுகள் விற்பனையாகியுள்ளன.
இருப்பினும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் யார் யார் எந்தெந்த டிக்கெட் வாங்கியுள்ளார்கள் என்பதைக் கவனிக்காமல் 35 ஆயிரம் பேர்களை மட்டுமே உள்ளே அனுமதித்துள்ளனர். மற்றவர்களுக்கு உள்ளே அனுமதி கிடைக்கவில்லை. இதனால் டிக்கட் வாங்கிய ஏனையோர் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர். இதனையடுத்து பலரும் ஏ.ஆர் ரகுமான் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைக் கண்டித்து வந்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது மறக்குமா நெஞ்சம் இசை வெளியீட்டு விழா நிறுவனம் குறித்த பணத்தை திருப்பியளிக்கும் பணியில் இறங்கியுள்ளது. அதாவது டிக்கட் முன்பதிவு செய்த் 3வலைத்தளங்கள் வழியாக பணத்தை திருப்பி செலுத்தும் பணியை தொடங்கி விட்டதாகவும், மற்றும் ரசிகர்களுக்கு ஏற்பட்ட அனைத்து சிரமங்களுக்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தகவல் தெரிவித்திருக்கின்றது.
Listen News!