• Sep 20 2024

கறுப்பிலும் ஒரு கவர்ச்சியா... புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தும் ராகுல் ப்ரீத் சிங்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் அழகிலும் சரி, நடிப்பிலும் சரி முன்னணி வகிக்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். இவர் செல்வராகவனின் '7ஜி ரெயின்போ காலனி' படத்தின் கன்னட மொழி பெயர்ப்பான 'கில்லி' படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமாகியிருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ், மற்றும் தெலுங்கு மொழிப் படங்களிலும் தனது கவனத்தை செலுத்த தொடங்கினார்.



அந்தவகையில் இவரின் முதல் தமிழ்ப் படமாக 'தடையறத்தாக்க' அமைந்திருந்தது.  அதனைத் தொடர்ந்து 'புத்தகம்' உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் கமிட்டான இவர் 'என்னமோ ஏதோ' என்னும் படத்தில் நித்யாவாக நடித்திருந்தார். அதே போன்று தெலுங்கில் முன்னணி நாயகிகளில் ஒருவராக உள்ள இவர் அங்கும் 'ப்ரூஸ்லீ, ஸ்பைடர்' போன்ற ஹிட் படங்களில் நடித்திருக்கின்றார்.



இவற்றில் மகேஷ்பாபு நாயகனாக நடித்து வெளியான 'ஸ்பைடர்' படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானமை குறிப்பிடத்தக்கது. இவை மட்டுமல்லாது இன்னும் பல படங்களில் நடித்துள்ள ராகுல் ப்ரீத் சிங் இன்றும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றார்.



இவர் படங்களில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கின்ற ஒருவர். அடிக்கடி தனது கவர்ச்சிப் புகைப்படங்களை அவற்றில் பகிர்ந்து வருவது வழமை. அந்த வகையில் இவர் தற்போதும் கறுப்பு நிறத்தில் கவர்ச்சிப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கின்றார். 

இதை பார்த்த ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா? லைக்ஸ்களை அள்ளிக்குவித்து வருவதோடு கமெண்டுகளால் ஜொள்ளு விட்டும் வருகின்றார்கள்.


Advertisement

Advertisement