• Sep 20 2024

அங்கங்கு அங்கங்களை காட்டும் ராகுல் ப்ரீத் சிங்... அதுவும் ரொமான்டிக் லுக் வேற... ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் பெண் நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். இவர் செல்வராகவனின் '7ஜி ரெயின்போ காலனி' என்ற படத்தின் கன்னட மொழிபெயர்ப்பான 'கில்லி' படத்தின் மூலம் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார்.


அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்திருந்தார். அந்தவகையில் இவரின் முதல் தமிழ் படமாக 'தடையறத்தாக்க' அமைந்திருந்தது. பின்னர் அதனைத் தொடர்ந்து 'புத்தகம்' உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆன ராகுல் ப்ரீத் சிங் 'என்னமோ ஏதோ' என்னும் படத்தில் நித்யாவாக நடித்தன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.


தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். எனினும் அங்கு போதுமான வரவேற்பு கிடைக்காத காரணத்தால் ஹிந்தி, தெலுங்கு என பிற மொழிகளுக்கு தாவிய ராகுல் ப்ரீத் சிங் அங்கு முன்னணி நாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வருகின்றார். 

அதுமட்டுமல்லாது தெலுங்கில் 'ப்ரூஸ்லீ, ஸ்பைடர்' போன்ற ஹிட் படங்களிலும் இவர் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் மகேஷ்பாபுவுடன் இவர் இணைந்து நடித்த 'ஸ்பைடர்' படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மீண்டும்  தமிழ் சினிமாவிற்குள் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார்.


இவ்வாறாக பல படங்களிலும் நடித்து வந்த இவர் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி இருந்த என் ஜி கே படத்தில் இரண்டாவது நாயகியாக தோன்றி மாஸ் காட்டியிருந்தார். அதனைத் தொடர்ந்து பாலிவுட் சினிமாவிலும் கால் பதித்த இவர் பாலிவுட்டிலும் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார்.

ராகுல் ப்ரீத் சிங் நடிப்பில் எந்தளவிற்கு ஆர்வம் கொண்டவரோ அந்தளவிற்கு கவர்ச்சி உடைகளிலும் அலாதி பிரியம் கொண்டவர். அந்த வகையில் அடிக்கடி தன்னுடைய அங்கங்களை காட்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.


இந்நிலையில் மஞ்சள் நிற உடையணிந்து ரசிகர்களை மயக்கும் விதத்தில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார். அவை தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement