இந்திய திரைப்பட நடிகைகளில் பிரபலமான ஒருவரே ராகுல் ப்ரீத் சிங். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல இந்தி மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் இவர் தெலுங்கானா மாநில அரசாங்கத்தின் 'பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள்' திட்டத்திற்கான தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இவருக்கு சமீபகாலமாக எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் இந்தி சினிமாப் பக்கம் போய் உள்ளார். அங்கு ஒரு சில படங்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் தான் தற்போது தென்னிந்திய திரையுலகைப் பற்றி ரகுல்பிரீத் சிங் ஏளனமாக பேசியதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ''இந்தி சினிமாவை தென்னிந்திய சினிமா கொன்று விட்டது என்றும், இந்தி சினிமா கதை முடிந்து விட்டது என்றும், இனி யாராலும் அதை தூக்கி நிலை நிறுத்த முடியாது என்றும் சிலர் பேசுவதை நான் ஏற்க மாட்டேன். எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் அதில் நடிக்கும் நடிகர்-நடிகைகள், கதை, தொழில்நுட்ப கலைஞர்கள் உழைப்பை பொறுத்தே வெற்றி பெறும்" என்று கூறி இருந்தார்.
இவர் இவ்வாறு கூறியதன் மூலமாக தென்னிந்திய சினிமாவை இழிவுபடுத்தி விட்டதாக வலைத்தளங்களில் இவருக்கெதிராக கண்டனங்கள் கிளம்பி வந்தன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது ராகுல் ப்ரீத் சிங் "ஒருநாள் அனைத்து மொழி சினிமா துறையும் ஒன்றாக இணைந்துவிடும். அதற்குள் இதுபோன்ற வெட்டி பேச்சுக்கள் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்" என்று துணிச்சல் நிறைந்த பெண்ணாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
Listen News!