• Sep 20 2024

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து மற்றுமொரு பிரபலமும் விலகுகின்றாரா..? வெளியானது உண்மைத்தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ராஜா ராணி சீசன் 2. இத் தொடரை பிரவீன் பென்னட் இயக்கி வருகின்றார்.

இத்தொடரில் சித்து மற்றும் ஆல்யா மானசா முக்கிய நடிகர்களாக முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடித்தார்கள்.



ஆனால் ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால் தொடரில் இருந்து  திடீரென விலகினார், அவருக்கு பதில் ரியா நடித்து வருகிறார்.

இவ்வாறுஇருக்கையில் சமீபத்தில் தொடரில் இருந்து வில்லியாக நடித்துவந்த அர்ச்சனா விலகினார், ஆனால் அதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை.மேலும்  இப்படி இதுவரை தொடரில் இருந்து 2 பேர் விலகிவிட்டார்கள்.



எனினும் தற்போது சமூக வலைதளங்களில் இதில் நாயகனாக நடிக்கும் சித்து தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வர ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். ஆனால் உண்மையில் அவர் வெளியேறும் முடிவே எடுக்கவில்லையாம் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.



புதிய பட வாய்ப்பு தான் இப்போது அவருக்கு வந்துள்ளதாம், இதனால் தொடரில் இருந்து அவர் விலகுவதாக வதந்திகள் கிளம்பியுள்ளன.

Advertisement

Advertisement