• Nov 17 2024

ராஜா ராணி அர்ச்சனா மாட்டிக்கொண்டாரா...? காதலனுடன் உல்லாசம்...

ammu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பர பரப்பாக ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா என்ற சீரியலில் நாயகனாக நடித்தவர் அருண். இவர் பாரதி என்று மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார். பாரதி கண்ணம்மா 2ல் இவர் நடிக்காதது பலரிற்கும் கேள்விக்குறியாக இருந்தது.


அதேபோல் ராஜா ராணி சீரியல் வில்லியாக நடித்து வந்தவர் அர்ச்சனா. வில்லியாக இருந்தாலும் இவரின் நடிப்பு மக்களை ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம் அந்த வகையான நடிப்பு. இருந்தும் இவர் சீரியலை விட்டு விலகி விட்டார்.


அந்த வகையில் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய வண்ணம் இருக்கின்றன. ஆனால் இதுவரை இருவரும் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.


இப்படியான நிலையில் ராஜா ராணி அர்ச்சனா மற்றும் பாரதி கண்ணம்மா அருண் என இருவரும் ஒரே இடத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இருவரும் சுற்றுலா சென்றுள்ள வீடியோவை தனித்தனியாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


இந்த வீடியோக்கள் மூலம் இருவரும் ஒரே இடத்திற்கு சுற்றுலா சென்று இருப்பதை கண்டுபிடித்து ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். வெகு விரைவில் இவர்களுக்கு திருமணம் ஆகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

See this Instagram video by @vj_archana_: https://www.instagram.com/reel/CocW__1AD01/?utm_source=ig_web_button_share_sheet

See this Instagram video by @arun_actor: https://www.instagram.com/reel/CoiDu2JjbjE/?utm_source=ig_web_button_share_sheet


Advertisement

Advertisement